Freelancer / 2022 ஜனவரி 05 , பி.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய பாதுகாப்பு ஒடுக்குமுறைக்கு மத்தியிலும் ஹொங்கொங்கில் இருந்து தாய்வானில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஜனநாயகத் தீவான தாய்வான், முன்னாள் பிரித்தானிய காலனியான ஹொங்கொங்கில் இருந்து ஒரு புதிய அலை வரவை எதிர்பார்க்கிறது.
அங்கு ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நகரம் முழுவதும் சிவில் சமூகம், பொது எதிர்ப்பு மற்றும் அரசியல் எதிர்ப்பு ஆகியவற்றின் மீது கடுமையான ஒடுக்குமுறைக்கு தலைமை தாங்குவதாக ரேடியோ ஃப்ரீ ஆசியா தெரிவித்துள்ளது.
தாய்வான் குடிவரவுத் துறையின் சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, 2021 ஆம் ஆண்டில் தாய்வானுக்கு குடிபெயர்ந்த ஹொங்காங் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக மெயின்லேண்ட் விவகார ஆணைக்குழுவின் செய்தித் தொடர்பாளர் சியு சுய்-செங் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக, தாய்வான் உள்துறை அமைச்சு 2021ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் நவம்பருக்கு இடையில் ஹொங்கொங்கில் வசிப்பவர்களுக்கு 9,772 குடியிருப்பு அட்டைகளை வழங்கியது என்றும் இது 2020 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 9,501 ஆக இருந்தது என்று ரேடியோ ஃப்ரீ ஏசியா தெரிவித்துள்ளது.
1,572 ஹொங்கொங் வாசிகளுக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டதுடன், முந்தைய ஆண்டு இதே காலத்தில் 1,397 பேருக்கு வழங்கப்பட்டதாகவும் செய்தி தெரிவிக்கிறது.
9 minute ago
14 minute ago
42 minute ago
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
42 minute ago
13 May 2026