2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

தினமும் 4 பேருக்கு எச்.ஐ.வி தொற்று பாதிப்பு

Mithuna   / 2024 பெப்ரவரி 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு ஆசிய நாடான கம்போடியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 4 பேர் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று தேசிய எய்ட்ஸ் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், “கம்போடியாவில் ஆண்டுக்கு ஏறத்தாழ 1,400 பேர் புதிதாக எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்படுகின்றனர் அல்லது ஒரு நாளைக்கு சுமார் 4 பேர் இந்த எச்.ஐ.வி.யால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் எச்.ஐ.வி.யால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 42 சதவீதம் பேர் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். தென்கிழக்கு ஆசிய நாட்டில் தற்போது சுமார் 76 ஆயிரம் பேர் எச்.ஐ.வி.யுடன் வாழ்ந்து வருகின்றனர்.” என தெரிவித்துள்ளது. கம்போடியாவில், முதல் எச்.ஐ.வி. தொற்று 1991 ல் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .