Editorial / 2019 ஏப்ரல் 23 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய இணக்க அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் லிபியத் தலைநகர் திரிபோலி மீதான லிபிய தேசிய இராணுவத்தின் இரண்டு வார வலிந்த தாக்குதல்களின் அதிகரிப்பாக, வான் தாக்குதல்களைத் தொடர்ந்து வெடிப்புகளால் திரிபோலி அதிர்ந்துள்ளது.
திரிபோலியை 10 நிமிடங்களுக்கு மேலாக வட்டமடித்த விமானமொன்று தெற்கு மாவட்டமொன்றில் தாக்குதல் நடத்தியதை அங்குள்ளவர்கள் கண்டுள்ளநிலையில், வான் தாக்குதல்களால் ஏற்பட்டதெனத் தோன்றும் சக்திவாய்ந்த வெடிப்புகள் திரிபோலியின் தெற்கு மாவட்டங்களில் நேற்று முன்தினம் அவதானிக்கக் கூடியதாக இருந்துள்ளது.
இந்நிலையில், ஆளில்லாத ட்ரோனோ அல்லது தாக்குதல் விமானமோ, குறித்த தாக்குதலுக்கு பின்னாலுள்ளது என்பது தெளிவில்லாமல் உள்ளது.
கடந்த சில நாட்களாக ட்ரோன் தாக்குதல்கள் இடம்பெற்றதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தபோதும் அவை உறுதிப்படுத்தப்படவில்லை. அந்தவகையில், முன்னைய நாட்களை விட இறுதியாக திரிபோலியின் மத்தியில் கேட்ட வெடிப்புச் சத்தங்கள், மிகவும் சத்தமானவை என அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நீண்ட நாள் இராணுவ வெற்றியையடுத்து, தமது படைகள் புதிய நிலைகளைக் காப்பதாக தேசிய இணக்க அரசாங்கத்தின் பேச்சாளர் முஸ்தபா அல்-மெஜி தெரிவித்துள்ளார். இது தவிர, ட்ரோன் தாக்குதல்களை பற்றி சம்பவத்தைக் கண்ணுற்ற சிலர் தெரிவித்தபோதும், பொதுமக்களை அச்சுறுத்துவதற்காக லிபிய தேசிய இராணுவத்தின் ஹெலிகொப்டர்களால் நடாத்தப்பட்ட வான் தாக்குதல்களே வெடிப்புகள் என முஸ்தபா அல்-மெஜி மேலும் கூறியுள்ளார்.
இந்நிலையில், சபா மாவட்டத்திலுள்ள தேசிய இணக்க அரசாங்கத்து ஆதரவான படைகளின் இராணுவ முகாமொன்றை சில ஏவுகணைத் தாக்குதல்கள் தாக்கியதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, திரிபோலியினுள், அதைச் சூழ இடம்பெறும் மோதல்களால் 30,000க்கு மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம், குறைந்தது 227 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,125க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago