Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 ஏப்ரல் 29 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்பாலின திருமணங்களுக்கு உலக நாடுகளில் பல சட்ட அங்கீகாரத்தை வழங்கி இருக்கிறது. எனினும், ஈராக் போன்ற நாடுகள் ஓரினச்சேர்க்கையை குற்றச்செயலாக்கி சட்டம் இயற்றி இருக்கிறது.
மத்திய கிழக்கு நாடான ஈராக் நாட்டில் தன்பாலின திருமணங்கள் குற்றச்செயலாக அறிவிக்கபட்டு தடை விதிக்கபட்டு இருக்கிறது. மேலும், இந்த தடையை மீறுவோருக்கான தண்டனை குறித்தும் அறிவிக்கபட்டு இருக்கிறது.
ஓரினச்சேர்க்கையை சட்டபூர்வமாக்கி அதனை ஏற்றுக்கொண்ட 130 நாடுகள் உலகளவில் இருக்கின்றன. எனினும், இந்த ஓரினச்சேர்க்கை இயற்கைக்கும் கலாசாரத்திற்கும் மாறானது என இதனை தடை செய்தும் குற்றச்செய்யலாகவும் சுமார் 60 நாடுகள் அறிவித்து இருக்கின்றன.
சமீபத்தில், ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்கியது தாய்லாந்து அரசு. இந்த அங்கீகாரத்திற்கு உலகளவில் மிகப்பெரிய கவனம் கிடைத்தது. இந்நிலையில், ஈராக் நாட்டில் தன்பாலின திருமணங்கள் தடை செய்யப்பட்டு அதற்கான சட்டங்களும் நிறைவேற்றபட்டு இருக்கின்றன.
முன்னதாக, ஈராக் நாட்டு பாராளுமன்றத்தில் மந்திரிகள் முன்னிலையில் இந்த தன்பாலின ஈர்ப்பு குறித்து முடிவெடுக்க வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், பெரும்பான்மையான மந்திரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, இதனை குற்றச் செயலாக அறிவித்து மீறுவோருக்கான தண்டனைகளும் வரையறுக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த சட்டங்களில் தன்பாலின ஈர்பாலர்களுக்கு மட்டுமன்றி மூன்றாம் பாலினத்தவர், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்கீழ் ஓரினச்சேர்க்கை திருமணத்தில் ஈடுபடுவோருக்கு 10 முதல் 15 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்கிற சட்ட மசோதா நிறைவேற்றபட்டு இருக்கிறது.
மேலும், மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள், திருநம்பிகளுக்கும் 1 முதல் 3 ஆண்டு வரையிலான சிறை தண்டனை, இவர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு சிறை தண்டனை, விபசாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு சிறை தண்டனை என விதிக்கபட்டு இருக்கின்றன.
ஈராக் நாட்டில் அமலுக்கு வந்திருக்கும் இந்த தடை சட்டங்களுக்கு LGBTQ ஆதரவாளர்களுக்கு மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பிவருகின்றன. முன்னதாக, கடந்த 1980களில் ஈராக் நாடு தன்பாலின ஈர்ப்பு ஏற்பட்டு திருமணம் செய்துக்கொள்பவர்களுக்கு மரண தண்டனை அறிவித்தது. ஆனால், ஈராக்கின் இந்த செயல்பாடுகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் கடுமையான எதிர்ப்புகள் உருவானது. அந்த வகையில், இந்த மரண தண்டனையை திரும்பப் பெற்றது ஈராக் அரசு.
ஈராக் நாடு தொடக்கத்தில் இருந்தே LGBTQ சமூகத்திற்கு எதிராக இருந்து வருகிறது. மேலும், பல முறை இந்த சமூகத்தினர் அந்நாட்டில் சவாலான சூழல்களை சந்திருத்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது தன்பாலின திருமணத்தை குற்றமாக்கி தடைவிதித்து சட்டத்தை நிறைவேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago