Freelancer / 2024 ஓகஸ்ட் 05 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

“எப்போ திருமணம்?” எனக்கேட்டு வந்த நபரை, கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் சிரேகர் (45) என்ற நபர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் அசிம் இரியான்டோ (60) என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வசித்து வந்துள்ளார். இதனிடையே இந்த முதியவர் சிரேகரிடம், “ஏன் தனியாக இருக்கிறாய்? எப்போது கல்யாணம் செய்து கொள்வாய்?” என அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இதனால் சிரேகர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 29ஆம் திகதி கடும் கோபத்துடன் முதியவர் இரியான்டோ வீட்டிற்குள், கட்டையுடன் சிரேகர் நுழைந்து, முதியவரின் மனைவியின் முன்னிலையிலேயே அவரை மரக்கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் வந்து சிரேகரைத் தடுத்து நிறுத்தி முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிரேகரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில், திருமணம் குறித்து அவர் தொடர்ந்து கேள்வி கேட்டு வந்ததால், தான் மனதளவில் பாதிக்கப்பட்டு முதியவரைத் தாக்கியதாக சிரேகர் வாக்குமூலம் அளித்துள்ளார்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .