2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தீ விபத்தில் பலியானவர் குடும்பங்களுக்கு குவைத் அரசின் இழப்பீடு

Freelancer   / 2024 ஜூன் 20 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குவைத் நாட்டில் உள்ள மங்காப் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த 12ஆம் திகதி பயங்கர தீவிபத்து ஏற்பட்டதில் 46 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.12.5 இலட்சம் இழப்பீடு வழங்க குவைத் மன்னர் ஷேக் மேஷால் அல் அகமது அல் ஜபேர் அல் சபா உத்தரவிட்டுள்ளார்.

இதில் கேரளாவை சேர்ந்த 24 பேர் பலியானார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அந்த மாநில அரசு தலா ரூ.5 இலட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 இலட்சம் நிதியுதவி வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .