2026 மே 09, சனிக்கிழமை

dd

தீக்குளிக்க முயன்ற திபெத்தியரின் முயற்சி முறியடிப்பு

Freelancer   / 2022 மார்ச் 05 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

திபெத் பிராந்தியத்தின் தலைநகரான லாசாவிலுள்ள முக்கிய சின்னமான பொட்டாலா அரண்மனைக்கு முன்னால் தீக்குளிக்க முயன்ற திபெத்தியரின் முயற்சி, சீன பொலிஸாரால் முறியடிக்கப்பட்டதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொட்டாலா அரண்மனைக்கு முன்னால் கோஷங்களை எழுப்பிய நிலையில் தீக்குளிக்க முயன்ற நபரை சீன பொலிஸார் அவ்விடத்திலிருந்து அழைத்துச் சென்றதாகவும் அவரது அடையாளம், நிலை மற்றும் இருப்பிடம் தெரியவில்லை என்றும் பிரதேச வட்டாரங்கள் தெரிவித்தாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் பின்னர், பொட்டாலா அரண்மனைக்கு முன்னால் வழக்கத்தை விட அதிகமான சீன பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அரண்மனையைச் சுற்றியுள்ள தெருக்களை மூடியுள்ளதாகவும் தெரியவருகிறது. நிறுத்தப்பட்டுள்ளனர்.

லாசாவில் ஆதிக்கம் செலுத்தும் பாரிய மலையான உச்சி பொட்டாலா,1649 முதல் 1959 வரை வரலாற்று சிறப்புமிக்க தலாய் லாமாக்களின் குளிர்கால அரண்மனையாக பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிக்குப் பின்னர் தற்போதைய தலாய் லாமா, இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற பின்னர், சீன துருப்புக்களால் அரண்மனை மீது ஷெல் வீசப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
 
திபெத்திய பகுதிகளில் சீன ஆட்சியை எதிர்த்து 2009 ஆம் ஆண்டு முதல் இதுவரை 157 திபெத்தியர்கள் தீக்குளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .