2025 ஜூலை 14, திங்கட்கிழமை

துப்பாக்கிச் சூடு.. குழந்தைகள் உட்பட பலர் பலி

Freelancer   / 2023 மே 07 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட 9  பேர் உயிரிழந்தனர்.

அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபரும்  உயிரிழந்துள்ளார்.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆலன் பிரீமியம் அவுட்லெட்ஸ் வணிக வளாகத்தில் மக்கள் பொருள்களை வாங்கி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, துப்பாக்கியுடன் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென பொதுமக்களை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாத நிலையில், இதுகுறித்து  பொலிஸார் விசாரித்து வருகின்றனர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .