2026 மே 09, சனிக்கிழமை

dd

துப்பாக்கியுடன் களமிறங்கிய உக்ரைன் அழகி

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 28 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 5ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே நடந்து வரும் மோதலில் 5,300 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

 மேலும் உக்ரைனில் இதுவரை 14 குழந்தைகள் உட்பட 352 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், 116 குழந்தைகள் உட்பட 1,684 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சு  தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உக்ரைன் இராணுவத்தில் சேரும்படி அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தனது  மக்களிடம் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு மிஸ் உக்ரைன் பட்டம் வென்ற அழகியான அனஸ்தீசியா லென்னா  (31) என்பவர் தனது நாட்டை காக்கும் பணியில் உக்ரைன் இராணுவத்துடன்  தானும் இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள பதிவில், படையெடுக்கும் நோக்குடன் உக்ரைன் எல்லையை கடக்கும் ஒவ்வொருவரும் சுட்டுக் கொல்லப்படுவார்கள். உக்ரைனுடன் துணை நில்லுங்கள், உக்ரைனுடன் கைசேருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .