Editorial / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

கரையோரத்துக்கு 356 அகதிகளைக் கொண்டு வருவதற்ககாக தங்களது ஓஷன் வைக்கிங் மீட்புக் கப்பலின் துறைமுக அனுமதிகளை இத்தாலி புறக்கணிப்பதாக மத்தியதரைக்கடலில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பும், பிரெஞ்சுத் தொண்டு நிறுவனமான எஸ்.ஓ.எஸ்-உம் தெரிவித்துள்ளன.
துறைமுக அனுமதிக்காக 13 நாட்களாக கடலில் காத்திருக்கும் நோர்வே கொடியைக் கொண்ட ஓஷன் வைக்கிங் கப்பலானது மோல்டாவுக்குள் நுழைவது அந்நாட்டால் மறுக்கப்பட்டதுடன், இத்தாலிய அதிகாரிகளிடம் முன்வைத்த இரண்டு கோரிக்கைகளுக்கும் பதிலளிக்கப்படவில்லை என எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பும், எஸ்.ஓ.எஸ்-உம் கூறியுள்ளன.
நான்கு வெவ்வேறு நடவடிக்கைகளில் கடலிலிருந்து மீட்கப்பட்ட பெரும்பாலான சூடானைச் சேர்ந்த ஆபிரிக்கர்களை ஓஷன் வைக்கிங் கொண்டுள்ளது. இதில், ஏறத்தாழ தனித்த 90 வயதுக்கு வராதோர் உட்பட 100 வயதுக்கு வராதோர்கள் உள்ளடங்கியுள்ளதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதவிர, மூன்று சிறுவர்கள், ஐந்து வயதுக்கு குறைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago