2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தூய்மைப் பணியாளரைத் திருமணம் செய்த பெண் வைத்தியர்

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 16 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண் வைத்தியர் ஒருவர் தூய்மைப் பணியாளரைத் திருமணம் செய்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.


பாகிஸ்தானின் ஒகாரா மாநிலத்திலுள்ள திபால்பூரில் வசித்து வரும் கிஷ்வர் சாஹீபா என்ற வைத்தியரே அவர் பணியாற்றி வரும் வைத்திய சாலையில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரியும் ஷசாத் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துள்ளார்.
 
இது குறித்து  கிஷ்வர் சாஹிபா கூறியதாவது, “ஷசாத்தை முதன்முதலில் சந்தித்தபோது, அவர் ஒரு ஒரு சுகாதாரப் பணியாளராகத் தோன்றவில்லை அவர் சொந்தமாகத் தொழில் செய்து வருவதையும் எளிமையாக இருப்பதையும் அறிந்து ஆச்சரியப்பட்டேன். ஷசாத்துடன் அற்புதமான திருமணவாய்ப்பை இழக்க விரும்பாததால் நான் ஷசாத்திடம் காதலை வெளிப்படுத்தினேன். 
 
இதனை அவர் சற்றும் எதிர் பார்க்கவில்லை. எவ்வாறு இருப்பினும் நாளடைவில் எனது காதலை ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்” என்றார்.


இந்நிலையில் அவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குறித்த வைத்திய சாலையை விட்டு வெளியேறி விட்டனர் எனவும் ,அதே ஊரிலேயே சொந்தமாக ஒரு கிளினிக் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டும் இல்லாமல் இந்த ஜோடி தங்களுக்கு என ஒரு யூடியூப் சேனலை உருவாக்கிக் கொண்டு அதில் தங்களுடைய அன்றாட வாழ்க்கையைப் பற்றிய பல முக்கிய நிகழ்வுகளை வீடியோவாக வெளியிட்டு பார்வையாளர்களுடன் பகிர்ந்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X