R.Tharaniya / 2025 ஒக்டோபர் 13 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்ஆப்பிரிக்காவின் தெற்கே ஈஸ்டர்ன் கேப் பகுதியில் இருந்து வடக்கே பிரிட்டோரியா தலைநகரில் இருந்து 400 கி.மீட்டர் தொலைவில் உஙளள லூயிஸ் டிரைகார்ட் நகரருகே என்1 நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அந்த பஸ் மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் உருண்டது. மலையடிவார பகுதியில் விழுந்தது. இந்த சம்பவத்தில், தலைகுப்புற பஸ் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி பயணிகள் உள்ளிட்ட 42 பேர் பலியானார்கள்.
அவர்களில் ஜிம்பாப்வே மற்றும் மாளவி நாடுகளை சேர்ந்த பலர் உள்ளனர். சொந்த ஊருக்கு அவர்கள் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவசரகால குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் பலர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

6 minute ago
17 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
1 hours ago
2 hours ago