2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தென்கொரிய ஜனாதிபதி அலுவலகத்தில் குப்பை பலூன்

Freelancer   / 2024 ஜூலை 24 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவின் குப்பை பலூன்கள் தென் கொரியாவின் ஜனாதிபதி வளாகத்தில் விழுந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுபற்றி மேலும் தெரியவருகையில்,

வடகொரியாவின் பலூன்கள் எல்லையைத் தாண்டி இன்று காலை தலைநகர் சியோலுக்கு வடக்கே பறந்த நிலையில் தென்கொரிய ஜனாதிபதி அலுவலகத்தின் மீது குப்பை பலூன்கள் விழுந்துள்ளன.

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால் தென் கொரிய தீபகற்பம் சமீபகாலமாக தொடர்ந்து பதற்றத்தில் உள்ளது.

இதன் காரணமாக தென்கொரியா மற்றும் வடகொரியா இடையே நீண்ட நாட்களாக மோதல் நிலவி வருகிறது.

இதனிடையே சில நாட்களாக இராட்சத பலூன்களில் குப்பைகளை நிரப்பி தென்கொரியாவிற்குள் வடகொரியா அனுப்பி வருகின்ற நிலையில், இதற்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X