2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

தென்கொரியா ஜனாதிபதி வெளிநாடு செல்ல தடை

Freelancer   / 2024 டிசெம்பர் 10 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கொரியாவில், அவசர நிலை அறிவித்த விவகாரத்தில், தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக்-இயோல், வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில், ஜனாதிபதி யூன் சுக்-இயோல் தலைமையிலான மக்கள் அதிகார கட்சி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த வாரம், தென்கொரியாவில் இராணுவ அவசர நிலை பிரகடனத்தை ஜனாதிபதி யூன் சுக்-இயோல் அறிவித்தார். இவரது இந்த முடிவுக்கு ஆளுங்கட்சியிலேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

இதனையடுத்து, அவசரநிலை பிரகடனம் மீளப் பெறப்பட்டது. எனினும், அவசரநிலையை செயற்படுத்தியதற்காக, ஜனாதிபதி பதவி விலக கோரி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். 

இதனால் நாட்டு மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கோரினார். எனினும், அவருக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மறுபுறம் அவசரநிலையை பரிந்துரை செய்ததற்காக அவர் மீது விசாரணை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. 

இதனால், யூன் சுக்-இயோல் தப்பிச் செல்லாமல் இருக்க, வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அவருக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .