2025 நவம்பர் 05, புதன்கிழமை

தேசிய இணக்க அரசாங்க படைகளால் திரிபோலியைக் காப்பதற்கான பதில் தாக்குதல்

Editorial   / 2019 ஏப்ரல் 09 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிபியத் தலைநகர் திரிபோலியைக் காப்பதற்கான பதில் தாக்குதலொன்றை அறிவித்துள்ள ஐக்கிய நாடுகளால் ஆதரவளிக்கப்படும் லிபிய அரசாங்கத்தின் பின்னாலுள்ள இராணுவம், திரிபோலியின் புறநகர்ப்பகுதிகளை நோக்கிச் செல்லும் ஜெனரல் காலிஃபா ஹஃப்தாருக்கு விசுவாசமான படைகளால் கைப்பற்றப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் மீளக்கைப்பற்றவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எரிமலையின் கோபம் என அறியப்படுகின்ற பதில் தாக்குதல் மூலம் ஆத்திரமூட்டுபவர், சட்டரீதியற்ற படைகளிடமிருந்து அனைத்து லிபிய நகரங்களையும் விடுவிக்கவுள்ளதாக தேசிய இணக்க அரசாங்கத்தின் படைகளின் பேச்சாளர் கேணல் மொஹமட் ஜிநென்னு, திரிபோலியில் செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

தேசிய இணக்க அரசாங்கத்தை பதவியிலிருந்து அகற்றும், திரிபோலியைக் கட்டுப்படுத்தும் தமது நோக்கத்தின் அங்கமாக, திரிபோலி புறநகரொன்றில் முதலாவது வான் தாக்குதலை நடத்தியதாக காலிஃபா ஹஃப்தாரின் படைகள் தெரிவித்தமையைத் தொடர்ந்தே குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.

அந்தவகையில், ஒருவரைக் கொன்றதாகக் கூறப்படும் திரிபோலிக்கு தெற்காக 50 கிலோ மீற்றரளவிலுள்ள காலிஃபா ஹஃப்தாரின் லிபிய தேசிய இராணுவத்தின் மீது கடந்த சனிக்கிழமை தேசிய இணக்க அரசாங்கப் படைகள் வான் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்தே மேற்குறித்த வான் தாக்குதல் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், திரிபோலியின் தெற்கு பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் 11 பேர் கொல்லப்பட்டதாகவும், 23 பேர் காயமடைந்ததாகவும், தேசிய இணக்க அரசாங்கத்தின் சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, காயமடைந்தோரையும், மோதல்களில் சிக்குண்ட பொதுமக்களையும் வெளியேற்றுவதற்காக திரிபோலியின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் இரண்டு மணித்தியால யுத்த நிறுத்தத்தை லிபியாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் நடவடிக்கை கோரியுள்ளது.

காலிஃபா ஹப்ஃதாரின் படைகளால் வலிந்த தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாட்களில் இரண்டு தரப்புகளிலும், பொதுமக்கள் உள்ளடங்கலாக குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வைத்தியரொருவர் உட்பட 21 பேர் கொல்லப்பட்டதாகவும், 27 பேர் காயமடைந்ததாகவும் திரிபோலியிலுள்ள அரசாங்கத்தின் சுகாதார அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துல்ள நிலையில், 14 படைகள் கொல்லப்பட்டதாக காலிஃபா ஹஃப்தாரின் படைகளின் பேச்சாளரொருவர் அஹ்மட் அல்-மெஸ்மரி கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X