Editorial / 2019 மே 29 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய நாடாளுமன்ற கீழ்ச்சபைக்கான தேர்தலில், இந்திய தேர்தல் ஆணைக்குழு மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே குறித்த கருத்தை சீமான் வெளிப்படுத்தியிருந்தார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“எங்களைப் பொறுத்தவரை நடந்து முடிந்த நாடாளுமன்ற கீழ்ச் சபை, தமிழ்நாடு சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி தான் கிடைத்துள்ளது. நாங்கள் சாதாரண குடிமக்களாக பிறந்து உண்மையான அரசியலை கொண்டு வந்து புரட்சிகரமான அரசியலை செய்து வருகிறோம்.
கடைகளில் இருந்து 150 வாக்கு எந்திரங்களை எடுத்து வருகிறார்கள். ஓட்டோவில் வாக்குப் பெட்டியை கொண்டு வருகிறார்கள். சிறுவன் வாக்களிக்கும் இயந்திரத்தை தூக்கிச் செல்கிறான். விடுதிகளில் வாக்களிப்பு இயந்திரங்கள் உள்ளன. இந்தக் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பார்த்திருப்பீர்கள்.
தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க தேர்தல் ஆணைக்குழும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் நேர்மையாக இருப்பதால் என்ன பயன்?
நாம் வளர்ச்சி பெற்று வருகிறோம் என மோடி பேசி வருகிறார். 30,000,000,000 இந்திய ரூபாயில் வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைத்திருக்கிறார்கள். அதே குஜராத்தில் மாடியில் தீ விபத்து ஏற்படும் போது அதனை ஏணி வைத்து தண்ணீரைப் பீய்ச்சி அணைக்க நம்மிடம் வசதி இல்லை. இதனால் 28 மாணவ, மாணவிகள் இறந்துள்ளனர். பேரிடர் காலங்களில் மக்களை எப்படி காப்பாற்றுவது என்ற அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாத நாடாக இந்தியா உள்ளது” எனக் கூறினார்.
8 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago