2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

தேவாலயத்தில் பாலியல் குற்றங்கள்: பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவாலயத்தில் நிகழ்ந்த பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்து, 3 ஆண்கள் தாக்கல் செய்த வழக்கைத் தொடர்ந்து, சிலியின் தலைநகரான சான்டியாகோவின் பேராயர், அவர்கள் மூவருக்கும் 650,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களை இழப்பீடாகச் செலுத்த வேண்டுமென, அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மூவருக்கும் எதிரான குற்றங்களை மூடி மறைத்ததன் காரணமாக, ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்குமாறே, இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதே வழக்கு, அந்நாட்டின் கீழ் நீதிமன்றமொன்றால், “போதிய ஆதாரங்கள் இல்லை” என்று தெரிவித்து, நிராகரிக்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X