Editorial / 2018 மே 25 , மு.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில், ஸ்டேர்லைட் நிறுவனத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது, தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, நேற்று முன்தினம் (23) ஒருவர் கொல்லப்பட்டார்.
பொலிஸாரில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, அசைவின்றிக் கிடந்த காளியப்பன் என்ற அந்த இளைஞனை, நான்கு பொலிஸார் வேகமாகத் தூக்கிச் சென்று இன்னோர் இடத்தில் போட்ட பின்னர், சுற்றி நின்று பார்த்த பொலிஸார் சிலர், “நடிக்காதே, எழுந்து ஓடு” என்று சொல்வதும், இன்னும் சிலர், “அவன் நடிக்கிறான்” என்று சொல்வதும், காணொளியொன்றில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காயமடைந்தவர் மீது கவனமெடுக்காமல், அலட்சியப் போக்கைப் பொலிஸார் வெளிப்படுத்தியதை இது காட்டுகிறது என, விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்விளைஞன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் பொதே உயிரிழந்திருந்தான் என, வைத்தியர்கள் குறிப்பிட்டனர்.
பதவியிலிருந்து ஒதுங்கினார் தலைவர்
இதேளை, இச்சர்ச்சைகளுக்கு மத்தியில், ஸ்டேர்லைட் நிறுவனத்தின் தலைமை நிறுவனத்தின் நிறைவேற்றுத் தலைவர் பொறுப்பிலிருந்து ஒதுங்கியிருக்கப் பொவதாக, அனில் அகர்வால் அறிவித்துள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தின் இலண்டனைத் தலைமையகமாகக் கொண்ட இந்நிறுவனத்தின் தூத்துக்குடி ஆலையே, சர்ச்சைகளைச் சந்தித்திருந்தது.
இந்நிலையிலேயே, நிறுவனத்தை நடத்தும் பொறுப்பிலிருந்து ஒதுங்கி, அறக்கட்டளைகளில் கவனத்தைச் செலுத்தப் போவதாக அவர் அறிவித்துள்ளார். அவரது இம்முடிவுக்கும், அண்மையில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கும் தொடர்பிருக்கிறதா என்பது தெரியவில்லை.
இதேவேளை, தமது ஆலையை மைப்படுத்திய இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக வருத்தமடைவதாகத் தெரிவித்த, ஸ்டேர்லைட் ஆலையின் உரிமை நிறுவனமான வேதந்தா, தமது ஊழியர்களினதும் வசதியினதும் சூழவுள்ள சமூகத்தினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தது.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025