2025 மே 19, திங்கட்கிழமை

நத்தைகளின் படையெடுப்பால் தனிமைப் படுத்தப்பட்ட மக்கள்

Ilango Bharathy   / 2022 ஜூலை 07 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}



அமெரிக்காவின்  ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பாஸ்கோ என்ற மாவட்டம்,  இராட்சத நத்தைகளின் படையெடுப்பினால்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

வருடத்திற்கு 2,500 முட்டைகள் வரை இடும் இவ்வகை இராட்சத நத்தைகள் மூலம், மூளைக் காய்ச்சல் பரவக்கூடிய அபாயம் உள்ளது எனவும்,  இதனால் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வகை நத்தைகளைக்  கண்டால் உடனே தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு அவற்றை வெறும் கையால் தொட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வகை இராட்சத நத்தைகளை வளர்ப்பது அமெரிக்காவில் சட்டப்படி குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X