Editorial / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுட் தண்டனைத் தீர்ப்புக்குள்ளான நளினிக்கு மேலும் மூன்று வார காலம் சிறைவிடுப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.
தனது மகளின் திருமணத்துக்காக கடந்த மாதம் 25ஆம் திகதி சிறைவிடுப்பில் வெளியே வந்த நளினி, சத்துவாச்சாரியில் தங்கி தினமும் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்நிலையில் நளினியின் மகள் ஹரித்ரா தமிழ்நாடு வருவதில் தாமதம் ஏற்படுவதால், சிறைவிடுப்பு காலத்தை நீட்டிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நளினி மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், மகள் திருமண ஏற்பாடுகளை முடிக்க முடியாததால் சிறை விடுப்பை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பதற்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். மனுவை பரிசீலித்த நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசாங்கத்துக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
அதன்படி இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நளினிக்கு மேலும் மூன்று வாரம் சிறைவிடுப்பு வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
16 minute ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
04 Nov 2025