Editorial / 2018 செப்டெம்பர் 20 , மு.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் ஷெரீப் ஆகியோரைப் பிணையில் விடுவிக்குமாறு, பாகிஸ்தான் நீதிமன்றமொன்று நேற்று (19) உத்தரவிட்டது. அத்தோடு, அவர்களின் மேன்முறையீட்டு விசாரணைகள் நடைபெறும்வரை, அவர்கள் மீதான சிறைத்தண்டனைகளை இடைநிறுத்தி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது என, முன்னாள் பிரதமரின் வழக்கறிஞரொருவர் தெரிவித்தார்.
“இன்று, இஸ்லாபாத் உயர்நீதிமன்றம், நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ், அவரது மருகன் கப்டன் சபார் ஆகியோருக்கு எதிரான தீர்ப்புகளை இடைநிறுத்தியதோடு, இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, அவர்களைப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டது” என, அவ்வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
இத்தீர்ப்பைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் நீதிமன்றத்துக்கு முன்னால் ஒன்றுகூடி, “பிரதமர் நவாஸ் ஷெரீப்” எனக் கோஷமிட்டனர்.
ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தால் 10 ஆண்டுகளுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப், இலண்டனிலிருந்து நாட்டுக்குத் திரும்பும்போது, விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவரது மகளுக்கு 7 ஆண்டுகளுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு, அவரும் விமான நிலையத்தில் வைத்தே கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இவர் சிறையில் அடைக்கப்பட்டமையின் காரணமாக, பிரதமர் பதவியை இழந்திருந்ததுடன், கட்சித் தலைவராகவும் இருக்க முடியாது என உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
38 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
53 minute ago
1 hours ago