2025 மே 15, வியாழக்கிழமை

நாக்கால் நாய் கின்னஸ் சாதனை

Janu   / 2023 ஜூன் 05 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் லூசியானாவை சேர்ந்த ஜோயி என பெயரிடப்பட்ட லாப்ரடோர்- ஜெர்மன் ஷெப்பர்ட் கலவை நாய்,  விசித்திரமான முறையில் கின்னஸ் சாதனை படைத்துள்ளமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12.7 சென்றிமீற்றர் நீளம் (5 அங்குலம்) கொண்ட நீளமான நாக்கினை இந்த ஜோய் கொண்டுள்ளது. அதனை கால்நடை மருத்துவர் அளந்து பார்த்ததன் பின்னரே கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

" ஜோயின் உரிமையாளர்களான சாடி மற்றும் ட்ரூ வில்லியம்ஸ், ஜோயி 6 வாரமாக இருக்கும் போது தாம் அதனை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

குட்டியாக இருக்கும் போதே ஜோயின் நாக்கு வாயில் இருந்து அடிக்கடி வெளியேறும். அதனால் அது இவ்வளவு நீளமாக வளரும் என்று நினைத்தோம். இப்போது சாதனை படைத்துள்ளது" என்று கூறியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .