Editorial / 2018 ஓகஸ்ட் 13 , மு.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
துருக்கி மீதான ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து, அந்நாட்டின் பணப் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், நாணய நெருக்கடியொன்றைத் தமது நாடு எதிர்கொள்ளவில்லை என, அந்நாட்டு ஜனாதிபதி றிசெப் தய்யீப் ஏர்டோவான் குறிப்பிட்டுள்ளார்.

துருக்கி நாணயமான லீராவின் கடுமையான வீழ்ச்சியை, பணப் பெறுமதியில் ஏற்படும் மாற்றங்கள் என வர்ணித்த அவர், பொருளாதாரத்தின் அடிப்படைகளோடு அவற்றுக்குச் சம்பந்தமில்லை எனவும் குறிப்பிட்டார்.
துருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்குமிடையிலான உறவுகள் பாதிக்கப்படைந்து வரும் நிலையில், லீராவின் பெறுமதியும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தது. இவற்றின் உச்சக்கட்டமாக, துருக்கியில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐ.அமெரிக்கப் பாதிரியாரை விடுதலை செய்வதற்கு, துருக்கி மறுத்தது.
இதைத் தொடர்ந்து, துருக்கியின் உருக்கி, அலுமியம் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான தீர்வையை, இரண்டு மடங்காக அதிகரித்து, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago