2026 மே 09, சனிக்கிழமை

dd

நாட்டுக்காக போரில் களம் இறங்கும் உக்ரேன் வீரர்

Freelancer   / 2022 பெப்ரவரி 27 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவின் உக்ரேன் மீதான படையெடுப்பு உலக நாடுகளை ஆட்டம் காணச் செய்துள்ளது. 

உக்ரேன் தலைநகர் கீவ் உள்ளிட்ட உக்ரேனிய நகரங்களை இலக்கு வைத்து ரஷ்ய படைகள் மும்முனை தாக்குதலை நடத்திவருகின்றன.

தாக்குதலிலிருந்து உயிர்காத்துக்கொள்ள ரயில் நிலையங்களிலும், பாதாள அறைகளிலும் , மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

தாய்நாட்டுக்காகப் போராடவரும் ஒவ்வொருவருக்கும் ஆயுதம் வழங்கப்படும் என உக்ரேன் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்காகத் தனது நாட்டின் இராணுவத்துடன் டென்னிஸ் வீரர் செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு விம்பிள்டனில் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி, உலகின் ஒற்றையர் தரவரிசையில் 31வது  இடத்தை ஸ்டாகோவ்ஸ்கி பெற்றிருந்தார்.

 2022ல் அவுஸ்திரேலிய ஓபன் தகுதிச் சுற்றில் ஸ்டாகோவ்ஸ்கி பங்கேற்றிருந்தார்.
இவர் தற்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பாக ஹங்கேரிக்கு அனுப்பி வைத்துவிட்டு  தாய் நாட்டுக்கான போரில் ஈடுபட உள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாகோவ்ஸ்கி செய்தியாளர்களிடம் பேசுகையில், “எனக்கு இராணுவ அனுபவம் இல்லை, ஆனால் துப்பாக்கியைக் கையாளும் அனுபவம் எனக்கு உள்ளது. நிச்சயமாக, நான் சண்டையிடுவேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்,  உக்ரைன் ராணுவ வீரர்களை உறுதியாக இருக்குமாறும்  அவர்களுக்கு உதவ இன்னும் பலர் வருகிறார்கள்  என தெரிவித்துள்ளார்.

36 வயதான ஸ்டாகோவ்ஸ்கி, ஐரோப்பா முழுவதும் உள்ள மக்களை ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக எங்கு, எப்படி வேண்டுமானாலும் எதிர்ப்பு தெரிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.(j)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .