Editorial / 2019 ஜூலை 03 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
காங்கிரஸ் தலைவர் என்ற அடிப்படையில் தேர்தல் தோல்விக்கு தானே பொறுப்பேற்றுக்கொள்வதால், தலைவர் பதவியை இராஜினாமா செய்கிறேன் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
தனது இராஜினாமா தொடர்பாக, இன்று (03) டுவிட்டரில் பதிவிட்டுள்ள நான்கு பக்க அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல்காந்தி, மக்களவைத் தேர்தலில் தீவிர பரப்புரை மேற்கொண்டார். ஆனால் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை.
இதனையடுத்து தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்கும் விதமாக காங்கிரஸ் கூட்டத்தில், தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார்.
ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர் பலரும் ராகுல் காந்தியின் இராஜினாமா முடிவை ஏற்க மறுத்தனர். ராகுல் காந்தியே காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இல்லை என்றும் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டதாகவும் ராகுல் காந்தி வெளிப்படையாக கூறியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சியை சீரமைக்க கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது என்றும் எனவே, கட்சிக்கான புதிய தலைவரை தெரிவு செய்யுங்கள் எனவும் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கானக் கூட்டத்தை உடனே கூட்டுங்கள் எனவும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
52 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
1 hours ago