2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

நாய் உடை அணிந்த யூ-டியூப் பிரபலம்

Freelancer   / 2023 ஜூலை 31 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானை சேர்ந்த டோகோ எனும் யூ-டியூப் பிரபலம் ஒருவர் நாய் உடை அணிந்து பூங்காவில் வலம் வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவர் சிறு வயது முதலே நாய்கள் மீது அதிக அன்பு கொண்டவர். நான் நாயாகவே பிறந்திருக்கலாம் என அடிக்கடி தனது நண்பர்களிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் நாயாக மாற வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றுவதற்காக அவர் இந்திய மதிப்பில் ரூ.12 லட்சம் செலவு செய்து நாய் உடையை உருவாக்கி உள்ளார்.

 பின்னர் அந்த உடையை அணிந்து கொண்டு நகரில் உள்ள பூங்காவில் வலம் வந்துள்ளார். பார்ப்பதற்கு நாய் போலவே தோன்றிய அவருடன் அப்பகுதியில் உள்ள நாய்கள் நட்பை வளர்த்து வருகின்றன.

டோகோ, 'ஐ வாண்ட் டு பி அனிமல்' என்ற யூ-டியூப் சேனலை நடத்தி வருகிறார். இவரது சேனலுக்கு 35 ஆயிரம் சந்தாதாரர்கள் உள்ளனர். இவரது நாய் தோற்ற உடையை அங்குள்ள பிரபல வணிக நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .