2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

நாஸி மரியாதை தொடர்பில் இரு பொலிஸாரிடம் விசாரணை

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியில் சட்டவிரோதமாகக் காணப்படும், ஹிட்லரின் மரியாதை (நாஸி சல்யூட்) முறையை வெளிப்படுத்தினர் எனக் குற்றஞ்சாட்டப்படும் இரண்டு பொலிஸார் மீது, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜேர்மனியின் தெற்கு மாநிலமான பவேரியாவிலேயே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாஸிக்களின் வன்முறை காரணமாகப் பிரதானமாகப் பாதிக்கப்பட்ட ஜேர்மனியில், அந்நாட்டு அரசமைப்புப் படி, நாஸி அடையாளங்களை வெளிப்படுத்துவது குற்றமாகும். அதிலும், குடியேற்றவாசிகள், இனவாதக் குற்றச்சாட்டுகள் என, ஜேர்மனியின் அரசியல் கலந்துரையாடல் காணப்படும் நிலையில், இவ்விடயம் மேலும் பிளவுகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X