2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நீண்ட நாட்களின் பின் வெற்றி; மகிழ்ச்சியில் உக்ரேன் ஜனாதிபதி

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 05 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேட்டோ படையுடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,  ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் முதல் உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.

அதே சமயம் உக்ரேனும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது. இப்போரில் உக்ரேனின் பெரும்பாலான பகுதிகளை  ரஷ்யப்  படைகள் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து கைப்பற்றப்பட்ட  பகுதிகள், ரஷ்யாவுடன் இணைக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர்  ரஷ்ய ஜனாதிபதி புடின்  அறிவித்தார்.

இந்நிலையில் ரஷ்ய படையினரிடமிருந்து உக்ரேனின்  முக்கிய நகரங்களை உக்ரேன்  இராணுவம் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது  ரஷ்யாவிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

 இது குறித்து உக்ரேன் ஜனாதிபதி  செலன்ஸ்கி  ”லைமன் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் சில,  ரஷ்ய படைகளிடம் இருந்து முற்றிலுமாக விடுவிக்கப்பட்டுள்ளது. எங்கள் இராணுவத்திற்கு மிக்க நன்றி” எனக்  கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X