Editorial / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்தின் குர்ஜா மலையில் திடீரென ஏற்பட்ட பலமான காற்றுக் காரணமாகப் பலியான 9 மலையேறிகளின் சடலங்களையும் மீட்கும் பணிகள், நேற்று (14) ஆரம்பிக்கப்பட்டன.
மிகவும் பலமான காற்றும் பனியும் தாக்கியதன் காரணமாக, மலையின் முகாமிட்டிருந்த, தென்கொரியாவைச் சேர்ந்த குழுவினரும் அவர்களின் வழிகாட்டிகளுமே பலியாகியிருந்தனர். இந்நிலையில், அவர்கள் தங்கியிருந்த முகாமில், ஹெலிகொப்டர்கள் மூலமாக, நான்கு மீட்புப் படையினர், நேற்றுக் காலை இறக்கிவிடப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, 9 சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டன எனத் தெரிவித்த, மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் குழு, சடலங்களைக் கீழே கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தது.
7,193 மீற்றர் உயரமான குர்ஜா மலையில், ஏறத்தாழ 3,500 மீற்றர் உயரத்தில், இவர்களின் முகாம் அமைந்திருந்தது. இந்நிலையில், அனுபவமிக்க மலையேறிகள் 5 பேரும், வழிகாட்டிகள் 4 பேரும், இவ்வனர்த்தத்தில் எவ்வாறு சிக்கினர் என்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையேறுதலில், முகாமிடும் பகுதி, மிகவும் நிலையான பகுதியாகக் கருதப்படும். இந்நிலையில், அவர்கள் தங்கியிருந்த முகாம், பாரிய குண்டுவெடிப்பு ஏற்பட்டதைப் போன்று காட்சியளிக்கிறது என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
38 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
53 minute ago
1 hours ago