Editorial / 2018 செப்டெம்பர் 20 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியாவின் 10 மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில், சுமார் 100 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 4 மாநிலங்களில் தேசிய அனர்த்தம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என, அந்நாட்டின் அனர்த்த நிவாரண முகவராண்மை தெரிவித்தது.
தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழை காரணமாக, நைஜர், பெனியு ஆகிய ஆறுகள் பெருக்கெடுத்துப் பாய்கின்றன. இதனால், பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்களின் வீடுகளும் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, கோகி, டெல்ட்டா, அனம்ப்ரா, நைஜர் ஆகிய நான்கு மாநிலங்களில், தேசிய அனர்த்தம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 8 மாநிலங்கள், கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன என, அனர்த்த முகவராண்மை குறிப்பிட்டது. அந்த மாநிலங்களிலும், பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோகி மாநிலத்தின் தலைநகர் லொகோஜோவில், தொடர்ச்சியாக வெள்ள நிலை உயர்ந்து வருவதோடு, 11.06 மீற்றர்களாக அது உயர்வடைந்துள்ளது என, அதிகாரிகள் குறிப்பிட்டனர். இது, 2012ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள நிலைமையை எட்டியுள்ளது. அப்போதைய வெள்ளத்தில், நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருந்தனர்.
வெள்ளப் பாதிப்புகளைத் தொடர்ந்து, அவசர மருத்துவ, நிவாரணப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக, 8.3 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை விடுவிப்பதற்காக, அந்நாட்டு ஜனாதிபதி முஹம்மட் புஹாரி அங்கிகாரம் அளித்துள்ளார்.
41 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
56 minute ago
1 hours ago