Editorial / 2018 ஜூன் 26 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நைஜீரியாவின் மத்திய பகுதியில், விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வன்முறைகளின் காரணமாக, குறைந்தது 86 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிளாட்யோ மாநிலத்தில், கடந்த வியாழக்கிழமை, இம்மோதல்கள் ஆரம்பித்தன என, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆரம்பத்தில், பெரோம் இனத்தைச் சேர்ந்த விவசாயிகள், ஃபுலானி இனத்தைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்களைத் தாக்கியுள்ளனர். இதன்போது, 5 பேர் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, இதற்கான பதில் தாக்குதல்கள், கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்போது, அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
மாநிலத்தின் பொலிஸ் ஆணையாளர் அன்டி ஏடி கருத்துத் தெரிவிக்கும் போது, வன்முறைகளைத் தொடர்ந்து, பொலிஸாரால் நடத்தப்பட்ட தேடுதல்களின் போது, 86 பேர் கொல்லப்பட்டனர் என்பதையும், 6 பேர் காயமடைந்தனர் என்பதையும் உறுதிப்படுத்தியதாகத் தெரிவித்தார்.
உயிர்ச் சேதங்களுக்கு மேலதிகமாக, 50 வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதுடன், 15 மோட்டார் வண்டிகள், இரண்டு வாகனங்கள் ஆகியனவும் கொளுத்தப்பட்டுள்ளன.
இந்த மோதல்களைத் தொடர்ந்து, பிளாட்டியோ மாநிலத்தின் மூன்று பகுதிகளில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இத்தரவு, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வெவ்வேறு இனக் குழுக்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் இடையிலான இம்மோதல், நீண்ட வரலாற்றைக் கொண்டது. காணி உரிமை, கால்நடைகளுக்கான புற்களைப் பெறுவதற்கான உரிமை ஆகியனவே, இவர்களுக்கிடையிலான மோதல்களுக்குப் பிரதானமான காரணங்களாகும்.
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago