2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

நைஜீரியாவில் தாக்குதலில் 55 பேர் பலி

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 07 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடகிழக்கு நைஜீரிய பொர்னோ மாநிலத்திலுள்ள கிராமமொன்றின் மீதான தாக்குதலில் குறைந்தது 55 பேரை ஆயுததாரிகள் படுகொலை செய்துள்ளனர். பல ஆண்டுகளாக இடம்பெயர்ந்த பின்னர் அண்மையிலேயே இக்கிராமத்துக்கு மக்கள் திரும்பியிருந்தனர்.

கமரூடனான எல்லைக்கருகேயுள்ள இக்கிராமத்தில் வெள்ளிக்கிழமை (05) இரவே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் வந்த போகோ ஹராமினது என நம்பப்படும் ஆயுததாரிகள் கண்டபடி சுட்டு வீடுகளைக் கொழுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .