Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Janu / 2025 மே 07 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய பாதுகாப்புக் குழு (NSC), பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பிரதமர் முஹம்மது ஷெஹ்பாஸ் ஷரீஃப் அவர்களின் தலைமையில் கூடியது. இந்தியாவின் தாக்குதல்களில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் ஆத்ம சாந்திக்காக இக்குழு பிரார்த்தனை செய்தது. மேலும் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்து, காயமடைந்தவர்கள் விரைவாக குணமடையவும் பிரார்த்தனை செய்தது. இந்தியாவின் தூண்டுதலற்ற, கோழைத்தனமான மற்றும் சட்டவிரோதமான போர் நடவடிக்கையால் ஏற்பட்ட கடுமையான நிலைமைகளைப் பற்றி தேசிய பாதுகாப்புக் குழு கலந்துரையாடியது.
2025 ஆம் ஆண்டு மே மாதம் 6 மற்றும் 7 ஆம் திகதிகளின் இரவில், இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தானின் இறையாண்மை மிக்க பிரதேசங்களான பஞ்சாபின் சியால்கோட், ஷகர்கர், முரித்கே மற்றும் பகவல்பூர், அத்துடன் ஆசாத் ஜம்மு காஷ்மீரின் கோட்லி மற்றும் முசாஃபராபாத் உள்ளிட்ட பல இடங்களில் ஒருங்கிணைந்த ஏவுகணை, விமான மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தின. இந்த தூண்டுதலற்ற மற்றும் நியாயமற்ற தாக்குதல்கள், கற்பனைத் தீவிரவாத முகாம்கள் உள்ளன என்ற பொய் காரணத்தை முன்வைத்து, வேண்டுமென்றே பொதுமக்கள் பகுதிகளை இலக்காக்கியதால், அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட பொது உள்கட்டமைப்புகளுக்கும் சேதம் ஏற்பட்டது. இந்தியாவின் இந்த ஆக்கிரமிப்பு செயல், நட்பு வளைகுடா நாடுகளின் வணிக விமானங்களுக்கும் பெரும் அபாயத்தை ஏற்படுத்தியது, இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் உயிர்கள் ஆபத்துக்குள்ளாயின. மேலும், சர்வதேச ஒப்பந்தங்களை மீறி, நீலம்-ஜெலம் நீர்மின்சார திட்டமும் வேண்டுமென்றே இலக்காக்கப்பட்டது.
இந்த சட்டவிரோத செயல்களை பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டுக்கு எதிரான வெளிப்படையான மீறல்களாகவும், சர்வதேச சட்டத்தின் கீழ் போர் நடவடிக்கைகளாகவும் தேசிய பாதுகாப்புக் குழு (NSC) கடுமையாகக் கண்டித்தது. இந்திய இராணுவத்தால் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பொதுமக்களை வேண்டுமென்றே இலக்காக்கியது ஒரு கொடூரமான மற்றும் வெட்கக்கேடான குற்றமாகும், இது மனித நடத்தைக்கான அனைத்து விதிமுறைகள் மற்றும் சர்வதேச சட்டங்களின் விதிமுறைகள் ஆகியவற்றை மீறும் செயலாகும்.
பாகிஸ்தான் தனது பிரதேசத்தில் தீவிரவாத முகாம்கள் உள்ளன என்ற இந்தியக் குற்றச்சாட்டுகளை வலுவாக மறுத்து வருகிறது. 2025 ஏப்ரல் 22க்கு பின்னர், நம்பகத்தன்மைவாய்ந்த, வெளிப்படையான மற்றும் நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் முன்வைத்த நேர்மையான ஆலோசனையும் துரதிர்ஷ்டவசமாக ஏற்கப்படவில்லை என்பதும் நினைவுகூரத்தக்கது. சர்வதேச ஊடகங்களின் பிரதிநிதிகள் ஏற்கனவே 2025 மே 6ம் திகதி இந்த 'கற்பனை தீவிரவாத முகாம்களை' பார்வையிட்டனர், மேலும் 2025 மே 7ம் திகதி இன்னும் பலர் பார்வையிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், தங்கள் பொய்மைகள் வெளிப்படும் அச்சத்தில், தங்கள் கூற்றுகளுக்கு சிறிதளவு ஆதாரமும் இல்லாமல், எந்த ஒரு நெறிமுறையும் அற்ற இந்திய தலைமை, தன் மாயாஜால எண்ணங்களையும் குறுகிய நோக்க அரசியல் இலக்குகளையும் தீர்க்க அப்பாவி பொதுமக்களைத் தாக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளது. அப்பாவி மக்களைத் தாக்குவது பாகிஸ்தானுக்கு ஏற்க்கத்தக்கதோ, பொறுத்துக்கொள்ளக்கூடியதோ அல்ல. அனைத்து நல்லறிவு மற்றும் பகுத்தறிவுக்கும் எதிராக, இந்தியா மீண்டும் இப்பிராந்தியத்தில் ஒரு நரகத்தைப் பற்றவைத்துள்ளது. இதன் விளைவுகளுக்கான முழுப் பொறுப்பும் இந்தியாவையே சாரும்.
பாகிஸ்தான் ஆயுதப் படைகள், 2025 ஏப்ரல் 22ம் திகதியில் தேசிய பாதுகாப்புக் குழு (NSC) அறிக்கையில் வரையறுக்கப்பட்ட சுய பாதுகாப்பு உரிமை மற்றும் பதிலடி கட்டமைப்புக்கு இணங்க, இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆசாத் ஜம்மு காஷ்மீர் உட்பட பாகிஸ்தானின் பிரதேச ஒருமைப்பாட்டை உறுதியுடன் பாதுகாத்தன. இந்த நடவடிக்கையில் ஐந்து இந்திய யுத்த விமானங்கள் மற்றும் தானியங்கி வானூர்திகள் (UAV) தாக்கி வீழ்த்தப்பட்டன.
ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 51வது பிரிவுக்கு இணங்க, அப்பாவி பாகிஸ்தானியர்களின் உயிரிழப்புக்கு பழிவாங்கவும், தன் இறையாண்மையின் வெளிப்படையான மீறலுக்கு பதிலடி அளிக்கவும், பாகிஸ்தான் தன் தேர்வுக்கேற்ப நேரம், இடம் மற்றும் முறைமையில் சுயபாதுகாப்பு உரிமையைக் கொண்டுள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தான் ஆயுதப் படைகளுக்கு முறையாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அப்பட்டமான ஆக்கிரமிப்பால் மிகவும் வருத்தமடைந்த, முழு பாகிஸ்தானிய மக்களும் தங்கள் தாய்நாட்டைப் பாதுகாப்பதில் ஆயுதப் படைகளின் வீரத்தையும் துணிச்சலையும், சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கைகளையும் மிகவும் பாராட்டுகிறார்கள் மற்றும் போற்றுகிறார்கள். எந்தவொரு மேலதிக ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ள இந்த தேசம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் நிற்கிறது.
இந்தியாவின் தூண்டுதலற்ற சட்டவிரோத செயல்களின் கடுமையை சர்வதேச சமூகம் தெரிந்து கொள்ளவும், சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களின் வெளிப்படையான மீறல்களுக்கு இந்தியாவை பொறுப்புள்ளதாக்கவும் தேசிய பாதுகாப்புக் குழு (NSC) வலியுறுத்துகிறது.
பாகிஸ்தான் கண்ணியத்தோடும் மரியாதையோடும் அமைதியை பேணுவதில் உறுதியாக உள்ளது. எமது இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றை மீற எந்த நடவடிக்கையையும் அனுமதிக்காது என்றும், எமது பெருமைமிகு மக்களுக்கு எந்தவித தீங்கும் ஏற்பட விடாது என்றும் மீண்டும் வலியுறுத்துகிறது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago