2026 பெப்ரவரி 17, செவ்வாய்க்கிழமை

பங்களாதேஷில் இன்று புதிய பிரதமர் பதவியேற்பு

S.Renuka   / 2026 பெப்ரவரி 17 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அரசு கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக கவிழ்ந்தது.

இதைத்தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.அங்கு புதிய அரசை தேர்ந்தெடுக்க கடந்த 12ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. 

இதில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்ட நிலையில், மற்றொரு முன்னாள் பிரதமரான கலீதா ஜியாவின் வங்காளதேச தேசியவாத கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 297 இடங்களில், 207 தொகுதிகளை அந்த கட்சி கைப்பற்றியது.

வலதுசாரி கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி 68 இடங்களை பெற்றது. நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து, பங்களாதேஷ தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனுமான தாரிக் ரகுமான் (வயது 60) புதிய பிரதம ராக பதவியேற்க உள்ளார். 

அவரது பதவியேற்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை (17) மாலை 4 மணிக்கு தலைநகர் டாக்காவில் நடக்கிறது.

பங்களாதேஷ் பாராளுமன்றத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தாரிக் ரகுமானுக்கு, பங்களாதேஷ ஜனாதிபதி முகமது சகாபுதீன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். 

அத்துடன், புதிய அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X