2025 மே 05, திங்கட்கிழமை

பங்களாதேசின் முன்னாள் அமைச்சர் கைது

Freelancer   / 2024 ஓகஸ்ட் 06 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷின் முன்னாள் அமைச்சரும், அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஜூனைத் அஹமதுவை இராணுவம் கைது செய்தது.

பங்களாதேசில் ஒரு மாதமாக நடந்த மாணவர் போராட்டங்களில், 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று தன் பதவியை இராஜினாமா செய்து, நாட்டை விட்டு வெளியேறினார். அங்கு ஆட்சியை இராணுவம் கையில் எடுத்தது.

இந்நிலையில், அந்நாட்டு பாராளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி ஷஹாபுதீன், ஜூலை 1 முதல் ஆக.,5 வரை கைதான அனைவரையும் விடுதலை செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இந்த முன்னாள் பிரதமர் கலிதாஜியாவை விடுதலை செய்ய ஜனாதிபதி நேற்று உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதற்கிடையே, ஹசீனா அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தவரும், அவாமி லீக் கட்சி தலைவருமான ஜூனைத் அஹமதுவை பொலிஸார் கைது செய்தனர்.

வெளிநாடு செல்ல டாக்கா விமானநிலையத்தில் காத்திருந்தபோது ஜூனைத் அஹமது கைது செய்யப்பட்டார்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X