2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பங்களாதேசில் மீண்டும் வன்முறை

Freelancer   / 2024 ஓகஸ்ட் 04 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேசில் தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.

பங்களாதேஷ் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30 வீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மீண்டும் கொண்டு வர ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து கடந்த மாதம் மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் குதித்தனர். தலைநகர் டாக்கா உள்பட பல்வேறு இடங்களிலும் மாணவர்கள் நடத்திய போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மாணவர் அமைப்புகளுக்கு ஷேக் ஹசீனா  கடந்த 2ஆம் திகதி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த மறுப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் மீண்டும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தலைநகர் டாக்காவில் கூடிய 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், “ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும்” என கோஷங்களை எழுப்பினர். அப்போது அங்கிருந்த பொலிஸார் மீது கற்களை வீசி தாக்கியதால் இருதரப்புக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்ததால் மீண்டும் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X