Freelancer / 2024 ஓகஸ்ட் 07 , மு.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷ் முன்னாள் கிரிக்கெட் வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மோர்டாசாவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான பங்களாதேஷ் அவமி லீக் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வான இவர், கட்சியின் கொறடாவாக செயல்பட்டு வந்துள்ளார்.
இந்த சூழலில் மோர்டாசாவின் வீட்டுக்குள் சென்ற போராட்டக்காரர்கள் அங்குள்ள பொருட்களை தீ வைத்து கொளுத்தினர்.
இந்த தீ வைப்பு சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. (a)

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .