Editorial / 2018 மே 29 , மு.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருளுக்கு எதிராக, பங்களாதேஷ் அரசாங்கத்தால் இம்மாதம் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையில், பாதுகாப்புப் படையினரால், இதுவரையில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நடவடிக்கைகள், அந்நாட்டுத் தலைநகர் டாக்காவிலேயே பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன.
கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது, சுமார் 100 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டதோடு, போதைப்பொருள் விற்பனையிலும் கடத்தல்களிலும் ஈடுபட்ட இன்னும் சிலர், நள்ளிரவு நேரத்தில் இடம்பெற்ற துப்பாக்கி மோதல்களில் கொல்லப்பட்டனர் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பங்களாதேஷில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கையை, பெரும் அழிவுகளை ஏற்படுத்திய, பிலிப்பைன்ஸின் போதைப்பொருளுக்கு எதிரான போர் என்ற நடவடிக்கையோடு, பங்களாதேஷ் மக்கள் ஒப்பிடுகின்றனர்.
இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், பல்லாயிரக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருட்களை நுகரும் பழக்கத்தைக் கொண்ட நூற்றுக்கணக்கானோர், அபராதம் விதிக்கப்பட்டுள்ளனர் என, அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்தனர்.
பங்களாதேஷில் காணப்படும் போதைப்பொருள் பிரச்சினையை எதிர்கொள்வதற்காக, அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசினாவால் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், அந்நாட்டில் இஸ்லாமிய ஆயுததாரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு ஒப்பானது என அறிவித்திருந்தார்.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025