2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

பங்களாதேஷ் தலைமை நீதிபதி இராஜினாமா

Freelancer   / 2024 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலக போராட்டக்காரர்கள் ஒரு மணி நேர கெடு விதித்த நிலையில், அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

பங்களாதேசில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் நாளடைவில் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர். நிலைமை மோசமானதை அடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இதனையடுத்து அந்நாட்டு பாராளுமன்றத்தை ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து, வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் நேற்று முன்தினம் (8) இரவு பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இதனைத் தொடர்ந்து, பங்களாதேசில் கடந்த இரண்டு நாட்கள் அமைதி நிலவிய நிலையில் மாணவ அமைப்புகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கின. அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட அனைத்து நீதிபதிகளும் பதவி விலக வேண்டுமென மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் வங்கதேச உச்சநீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமை நீதிபதி பதவி விலக ஒரு மணி நேரம் கெடு விதித்தனர். பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம் முடிவடைந்த நிலையில், நீதிபதிகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது வங்கதேசத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அந்நாட்டின் தலைமை நீதிபதி ஓ பைதுல் அசன் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக பங்களாதேசின் முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .