2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

படகு கவிழ்ந்ததில் 32 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 27 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில்,  பஞ்சகர்  மாவட்டத்தில், ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் (25) சுமார் 70க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற படகே இவ்வாறு கரடோயா(Karatoya ) ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விபத்தில்  32 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமானவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் எனவும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் காணப்படும், படகுகளில் பாதுகாப்புத் தரம் குறைவாக இருப்பதாலும் அதிகளவில் சுமை ஏற்றிச் செல்வதாலும் அடிக்கடி படகுகள் கவிழ்ந்து  விபத்துக்குள்ளாவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X