Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2023 மே 31 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாய் குட்டியொன்றுக்கு பல்கலைக்கழகமொன்று டிப்ளோமா பட்டம் வழங்கி கௌரவித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் உள்ள செட்டான் ஹால் பல்கலைக்கழகத்தில் கிரேஸ் மரியானி என்ற மாணவி கல்வி கற்று வந்துள்ளார்.
மாற்றுத்திறனாளியான அவருடன் அவரது வளர்ப்பு நாயான ஜஸ்டினும் தொடர்ந்து வகுப்பறைக்குச் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நாயைப் பாராட்டும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற அக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அம்மாணவியுடன் சேர்த்து அவரின் வளர்ப்பு நாய்க்கும் டிப்ளமோ பட்டம் வழங்கி செட்டான் ஹால் பல்கலைக்கழகம் சிறப்பித்துள்ளது.
ஜஸ்டின் டிப்ளமோ பட்டத்தை தனது வாயால் அழகாக கவ்வி பெற்றுக்கொண்ட போது அரங்கமே அதிர்ந்தது.
இந்நிலையில் இது குறித்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
24 minute ago
1 hours ago
1 hours ago