2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

போதை வேட்டை : பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழப்பு

Editorial   / 2025 ஒக்டோபர் 29 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதை கடத்தல் கும்பலை கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் நடத்திய சோதனையின் போது நடந்த தாக்குதலில் 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் அதிகரித்தது. இதனை தடுக்க 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதையடுத்து பதிலுக்கு பிரேசில் பொலிஸார் தாக்குதல் நடத்தினர்.இதனால் மோதல் முற்றியது. இந்த தாக்குதலின் போது 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள 46 பாடசாலைகள் மூடப்பட்டதாகவும், பெடரல் பல்கலைக்கழகத்தில் சிறப்பு வகுப்புகளை ரத்து செய்யப்பட்டு உள்ளது. பல்கலையில் தங்கி படிக்கும் மாணவர்கள் விடுதியில் பத்திரமாக இருக்கின்றனர் என கல்வித் துறை தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீதான ஒரு வருட விசாரணையைத் தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ''இந்த நடவடிக்கை வரலாற்றில் மிகப்பெரியது.

குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு அரசு கூடுதல் ஆதரவை வழங்க வேண்டும்'' என ரியோ டி ஜெனிரோ நகர் கவர்னர் கிளாடியோ காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார். இதனால் ரியோ டி ஜெனிரோ நகரில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X