Editorial / 2018 ஜூலை 10 , மு.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகும் (பிரெக்சிற்) பணிகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த, ஐ.இராச்சியத்தைச் சேர்ந்த அமைச்சரான டேவிட் டேவிஸ், அவரது பதவியிலிருந்து நேற்று முன்தினம் (08) விலகியுள்ளார். பிரெக்சிற் விடயத்தில், பிரதமர் தெரேசா மே-உடன் காணப்படும் வேறுபாடுகளைத் தொடர்ந்தே, அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளார்.
பிரெக்சிற் தொடர்பில், பிரதமரின் அமைச்சரவைக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்படும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேரம்பேசல்களை ஆரம்பிப்பதற்கான திட்டத்துக்கு, அமைச்சரவை அனுமதி கிடைத்திருந்தது. இதைத் தொடர்ந்தே, இத்திட்டத்தைக் கடுமையாக விமர்சித்து, தனது பதவியிலிருந்து டேவிஸ் விலகியுள்ளார்.
தற்போது அங்கிகரிக்கப்பட்டுள்ள கொள்கைத் திட்டத்தின் பொதுவான பார்வையின்படி, பேரம்பேசலில் மிகவும் பலவீனமான நிலைமைக்கு, ஐ.இராச்சியம் தள்ளப்படும் என, டேவிஸ் குற்றஞ்சாட்டினார்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட டேவிஸுக்கு, தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், பிரெக்சிற் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், அரசாங்கத்தில் காணப்படும், பிரெச்சிற்றுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்னர் வெளிப்படுத்தியோருக்கும் டேவிஸ் போன்றோருக்கும் இடையில், தொடர்ச்சியான கருத்து முரண்பாடுகள் இடம்பெற்று வந்தன.
இதன் விளைவாக, தனது அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகுவதற்கு, இதற்கு முன்னர், பல தடவைகள் அவர் முயன்றிருந்தாலும் கூட, தற்போதே அவர் விலகியுள்ளார்.
டேவிஸோடு சேர்ந்து, பிரெக்சிற் தொடர்பான கனிஷ்ட அமைச்சர்களான ஸ்டீவ் பேக்கர், சுவெல்லா பிரேவர்மான் ஆகியோரும், தங்களது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர் என அறிவிக்கப்படுகிறது.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago