Mayu / 2024 பெப்ரவரி 13 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹங்கேரி நாட்டின் பழமைவாத கட்சியின் ஜனாதிபதி சனிக்கிழமை (10) பதவி விலகியுள்ளார். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு உடந்தையாக இருந்தவர் என குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியது நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, போராட்டங்கள் இடம்பெற்ற நிலையில் அவர் பதவி விலகும் அறிவிப்பை சனிக்கிழமை (10) வெளியிட்டார்.
46 வயதான கட்டலின் நோவாக், 2022 முதல் ஜனாதிபதியாக பதவி வகித்துவந்தார்.
அரசு நடத்தும் குழந்தைகள் இல்லத்தில் நடந்த பாலியல் வன்முறையை மறைக்க உதவிய நபருக்கு ஜனாதிபதி அதிகாரத்தின் அடிப்படையில், ஏப்ரல் 2023 இல் பொதுமன்னிப்பு வழங்கியது, கடந்த ஒரு வாரமாக மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.
குழந்தைகள் இல்லத்தில் 2004 முதல் 2016 வரை குறைந்தது 10 குழந்தைகளையாவது பாலியல் ரீதியாக துன்புறுத்திய இல்லத்தின் இயக்குநருக்கு 8 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரை வாபஸ் வாங்க அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது சமீபத்தில் பொதுமக்களுக்குத் தெரியவந்தது.
இது குறித்து ஜனாதிபதி “கருணையின் அடிப்படையிலும் குற்றம் சாட்டப்பட்டவர் அவரை நம்பிய குழந்தைகளை துன்புறுத்தவில்லை என நம்பியதாலும் நான் அவருக்கு மன்னிப்பு வழங்கினேன். நான் தவறு செய்துள்ளேன். நான் யாரையேனும் துன்புறுத்தியிருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் உங்கள் பக்கம் நான் நிற்கவில்லை என கருதியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
6 minute ago
15 minute ago
25 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
25 minute ago
2 hours ago