2025 மே 19, திங்கட்கிழமை

பதவி விலகுகிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

Freelancer   / 2022 ஜூலை 07 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து இன்று இராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆனால், அவர் பிரதமராக இன்னும் சில மாதங்களுக்கு தொடர்வார் என்றும் தெரிகிறது.

கன்சர்வேடிவ் கட்சித் தலைமைக்கான தேர்தல் விரைவில் நடைபெறும். அக்டோபரில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டுக்கு முன்னதாக புதிய பிரதமர் பதவிக்கு வருவார்.

போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அண்மையில் பதவி விலகினர்.

இந்நிலையில், போரிஸ் ஜான்சன் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X