Mayu / 2024 ஒக்டோபர் 08 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்மேற்கு மெக்சிகோவில் குவேரோ மாகாணத்தில் சுமார் 2,80,000 பேர் வசிக்கும் சில்பான்சிங்கோ நகரின் மேயர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் அலெஜான்ட்ரொ ஆர்காஸ் என்பவர் வெற்றி பெற்று மேயராக பதவியேற்றார்.
இந்நிலையில், மேயராக பதவியேற்ற 6 நாட்களில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குவேரா மாகாணத்தில் சமீப காலமாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதில் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அங்கு கடந்த ஜூன் மாதம் நடந்த பொதுத்தேர்தலின்போது சுமார் 6 வேட்பாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
7 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago