2025 மே 16, வெள்ளிக்கிழமை

பத்து நாட்களில் 42 பேருக்கு தூக்கு தண்டனை

Ilango Bharathy   / 2023 மே 17 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அண்மைக்காலமாக ஈரானில் அதிகளவிலான தூக்குத் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

அதிலும் குறிப்பாக கடந்த பத்து நாட்களில் மட்டும் 42 பேர் தூக்கிடப்பட்டுள்ளதாக அந்நாட்டைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பான IRH தகவல் வெளியிட்டுள்ளது.

அதாவது கடந்த பத்து நாட்களில் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒருவர் தூக்கிலிடப்பட்டு வருவதாகவும்,  இப்படி தூக்கிலிடப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பலுச் பகுதியைச் சேர்ந்த சிறுபான்மையினர் எனவும் அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு. அதே போல் சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளார்.

இதற்கு சுவீடன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் பெரும்பாலான தூக்குத் தண்டனைகள் போதைப் பொருள் வைத்திருந்ததற்காகத்தான் வழங்கப்பட்டுள்ளன.

ஈரான் அரசின் மனிதத்தன்மையற்ற இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். எனினும் ஈரான் அரசு தூக்கு தண்டனைகள் வழங்குவதை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .