2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பிரிக்ஸ் கொள்கைகளுடன் இணங்கினால் மேலும் 10% வரி உயர்வு

Simrith   / 2025 ஜூலை 07 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிக்ஸ் அமைப்பின் "அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன்" தங்களை இணைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

"பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் எந்தவொரு நாட்டிற்கும் கூடுதலாக 10% வரி விதிக்கப்படும். இந்தக் கொள்கைக்கு எந்த விதிவிலக்கும் இருக்காது. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!" என்று டிரம்ப் ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில் கூறினார்.

2009 ஆம் ஆண்டு நடந்த முதல் உச்சிமாநாட்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தலைவர்களை பிரிக்ஸ் குழு ஒன்று சேர்த்தது. பின்னர் தென்னாப்பிரிக்காவை இந்த கூட்டமைப்பு சேர்த்தது. கடந்த ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .