2025 மே 09, வெள்ளிக்கிழமை

பாரம்பரிய சிலையை உடைத்தவருக்கு அபராதம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 21 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெல்ஜியம் நாட்டில் புராதன சின்னங்கள் மற்றும் பாரம்பரிய சிலைகள் அங்குள்ள ஒரு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மிகவும் பழமையான சில சிலைகளை சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதுப்பித்து வைத்திருந்தனர்.

 இந்நிலையில் ஐரிஷ் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் அந்த மையத்துக்கு சென்று சிலைகளை பார்வையிட்டுள்ளார். அப்போது அங்கு பாரம்பரியமிக்க 2 சிங்கங்கள் கொண்ட சிலை மற்றும் ஜோதியுடன் ஒரு மனிதனை கொண்ட சிலை ஆகியவற்றை பார்வையிட்டதோடு, அந்த சிலைகளின் மீது ஏறி அமர்ந்துள்ளார்.

அப்போது அதில் ஒரு சிலை உடைந்து விழுந்துள்ளது. இதைனையடுத்து. சேதப்படுத்தப்பட்ட சிலையின் மதிப்பு ரூ.16 இலட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய பொலிஸார் சிலையை சேதப்படுத்திய சுற்றுலாப் பயணியை கைது செய்து சிலையை புதுப்பிக்க ரூ.16 இலட்சத்தை அபராதமாக விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X