Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2023 மே 21 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்க பிரபலங்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய ரஷ்யா தடை விதித்துள்ளது.
உக்ரேன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு பொருளாதார நெருக்கடி தரும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக தடை உத்தரவை அமெரிக்க அரசு விதித்து.
மேலும், ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரேனுக்கு நவீன ஆயுதங்களையும் அமெரிக்கா வழங்கி வருகின்றது.
இது ரஷ்யாவுக்கு எரிச்சலுட்டி வரும் நிலையில், தன் பங்கிற்கு இத்தகைய தடை நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்க பிரபலங்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய ரஷ்யா தடை விதித்துள்ளது.
இதில் ஸ்டீபன் கால்பெர்ட், ஜிம்மி கெம்மல், செத் மேயர்ஸ் போன்ற முன்னணி தொலைக்காட்சி பிரபலங்களும் உள்ளடங்குகின்றனர்.
இது குறித்து ரஷ்யவெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” ரஷ்யாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் தக்க பதிலடி வழங்கப்படும் என்பதை அமெரிக்கா உணர வேண்டும். தடைக்கு ஆளான நபர்கள் ரஷ்யாவுக்கு எதிரான போலிக் கருத்துக்களை பரப்பியுள்ளனர். இதில் உள்ள சிலரின் நிறுவனங்கள் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்கி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago